இன்ஜி., சேர்க்கைக்கு அங்கீகாரம்; கல்லுாரிகள் விண்ணப்பிக்க அவகாசம்

0
14

வரும் கல்வியாண்டில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நடத்த விரும்பும் கல்லுாரிகள், அங்கீகாரம் பெற விண்ணப்பிக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், இன்ஜினியரிங் படிப்பை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யிடமும், அண்ணா பல்கலையிடமும் அங்கீகாரம் பெற வேண்டும். இதில், ஏ.ஐ.சி.டி.இ.,யில் அங்கீகார சான்றும், அண்ணா பல்கலையில் இணைப்பு அந்தஸ்து சான்றிதழும் வழங்கப்படும்.

இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பை நடத்த விரும்பும் கல்லுாரிகள், அங்கீகாரம் பெற, அண்ணா பல்கலைக்கு, ஆன்லைனில் விண்ணப்பத்தை அனுப்பலாம் என, பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி அறிவித்துள்ளார். விண்ணப்ப பதிவுக்கு, பிப்., 12 மாலை, 5:00 மணி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் போது, கல்லுாரியில் பணியாற்றும் பேராசிரியர்களின், அனைத்து விதமான சான்றிதழ்கள், ஆதார், பான் எண் ஆகியவற்றை உறுதி செய்து, பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here