இன்ஜினியரிங் படிப்பில் ஒரே பாடத்தில் 52% மாணவர்கள் தோல்வி! ஆசிரயர்களுக்கே பாடம் தெரியாத கொடுமை!!

0
80

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வியாழனன்று வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் பருவத்தேர்வில் ‘Python’ என்ற கம்பயூட்டர் பாடத்தேர்வை சுமார் 64 ஆயிரத்து 810 மாணவர்கள் எழுதினர். ஆனால், வெறும் 31 ஆயிரத்து 44 மாணவர்கள் மட்டுமே ‘Python’ பாடத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதாவது, தமிழகம் முழுவதும் சுமார் 52 சதவீத மாணவர்கள் ஒரே பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சாய்ராம் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மாறன் கூறுகையில், ‘இன்ஜினியரிங் முதலாமாண்டில் Python பாடம் வருகிறது. இது ஒரு கோடிங் முறையிலான படிப்பாகும். எனவே, முதலாமாண்டு மாணவர்கள் அதனை புரிந்து கொள்ள சிரமப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் பல கல்லூரிகளில் பைத்தான் பாடம் நடத்துவதற்கே ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பல்கலைக்கழகம் தான் தேர்வு வினாத்தாளை நெறிபடுத்த வேண்டும்’ இவ்வாறு தெரிவித்தார்.

பைத்தான் என்பது நவீன தொழில்நுட்ப பாடம் ஆகும். தற்போதுள்ள AI (Artificial Intelligence) என்பதை உருவாக்குவதற்கு அடிப்படை கோடிங் முறைக்கான படிப்பு. இன்ஜினியரிங் முதல் செமஸ்டரில் இது போன்ற பாடங்கள் இருப்பது வரவேற்க்கத்தக்கது என்றாலும், அதனை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கே மிகுந்த சிரமமாக உள்ளது.

இதன் காரணமாகத்தான் தமிழகம் முழுவதும் 52 சதவீத மாணவர்கள் பைத்தான் தேர்வில் தோல்விடைந்துள்ளனர். இதுதொடர்பாக அண்ணா பல்கலை்கழக துணை வேந்தர் சூரப்பா கூறுகையில், ‘சாப்ட்வேர் வல்லுநர்கள் மூலம் முதலில் ஆசிரியர்களுக்கு பைத்தான், கோடிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு அதறகு ஏற்ப தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்’ இவ்வாறு சூரப்பா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here