ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு!

0
48

CTET 2020: நடப்பு ஆண்டிற்கான மத்திய ஆசிரியர தகுதித் தேர்வு (CTET July 2020) விண்ணப்பப் பதிவு இன்றோடு முடியும் நிலையில், தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. CTET 2020 Last Date Extended

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு!
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு CTET விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பி.எட் முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

தமிழகத்தில் மாநில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு டெட் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது. அதே போல், CBSE, நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு Central Teacher Eligibility Test (CTET) தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு ஆண்டிற்கான CTET 2020 தேர்வு வரும் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. CTET தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 24 ஆம் தேதியோடு முடிவடைவதாக இருந்தது. பின்னர், விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, CTET தேர்வுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு! உடற்தகுதி தேவையில்லை!!

இந்த நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்றோடு முடியும் நிலையில், விண்ணப்பப்பதிவு கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.. அதன்படி, CTET 2020 தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு மார்ச் 13 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே,தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://ctet.nic.in இணையதளம் மூலம் இன்றே CTET தேர்வுக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here