ஆசிரியர்கள் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறைந்த அளவில் எழுதக்கூடாது!

0
231

கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத அளவில் எழுத வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் அறிவுரைப்படி பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைளை தெரிவித்துள்ளது. பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிப் பேருந்துகளில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த உத்தரவு

அதில், “தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வகுப்பறையில் கரும்பலகையில் எழுதும்போது எழுத்தின் அளவு 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவில் அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால் குழந்தைகள் வகுப்பறையின் எந்த இடத்தில் அமர்ந்திருந்தாலும் அது அவர்களின் பார்வை சார்ந்த சிரமங்களைக் குறைக்கும். மேலும் கரும்பலகையின் ஓரங்களில் எழுத்து அளவு குறியீடு ஸ்டென்சில் மார்க்கிங் அமைத்துக்கொண்டு எழுதுவது, ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரே அளவில் எழுத உதவியாக இருக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி: ரூ.44,000 ரொக்கப் பரிசு

மேலும், “கண் சார்ந்த பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு உள்ள குழந்தைகளை வகுப்பில் முதல் வரிசையில் அமர வைக்க வேண்டும். வகுப்பறையில் எப்போதும் ஒரே சீரான வெளிச்சம் இருக்க வேண்டும். மேலும் கரும்பலகை ஒளியை பிரதிபலிப்பதாகவும், பார்க்க சிரமமூட்டுவதாகவும் இருக்கக் கூடாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 1000 நூல்களுடன் நூலகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here