அரியலூர் மாவட்ட கராத்தே போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு

0
361

கராத்தே போட்டியின் ஒரு பிரிவான வூசு போட்டிக்கு அரியலூர் மாவட்ட அணிக்கான தேர்வு ஜெயங்கொண்டத்தில் நடந்தது. இதில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் வயது, எடை பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 8 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியை அரியலூர் மாவட்ட வூசு சங்கத் தலைவர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத்தின் மாநில துணை செயலாளர் தங்கபாண்டியன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகள் மாநில அளவில் அரியலூர் மாவட்ட அணிகாக விளையாடவுள்ளனர். முடிவில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here