அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – முழு விபரம்

0
56

முதுகலை படிப்புகளுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனோ பரவல் காரணமாக மாணவர்கள் நேரில் வந்து விண்ணப்பிக்காமல் ஆன்-லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு நாளை முதல் வருகிற 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டார்.

ஆன்லைன் வாயிலாக www.tngasapg.in மற்றும் www.tngasapg.org ஆகிய இணைய தளம் வாயிலாக முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் முதுகலை படிப்புகளுக்கான சான்றிதழ்களை 15 முதல் 20 ஆம் தேதி வரை www.tngasapg.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 58 ரூபாயும் பதிவுக்கட்டணமாக  இரண்டு ரூபாயும் என 60 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி.எஸ்.டி மாணவர்கள் பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here