அரசு உதவி பள்ளிகளுக்கும் 7.5 சதவீத ஒதுக்கீடு

0
51

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கத்தோலிக்க கல்வி சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவுக்கு, அரசு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 5க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here