அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 395 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு

0
78

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 395 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 26 அரசு கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ்  மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் 227 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போன்று 14 தனியார் கல்லூரிகளில் 1,949 எம் பி பி எஸ் இடங்கள் உள்ளன. இதில் 77 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. பல் மருத்துவக் கல்லூரிகளில் 180 இடங்கள் உள்ளன. இதில் 11 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 1,760 இடங்களில் 91 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

எனவே மொத்தம் 395 இடங்கள் இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு சமூகவாரி இட ஒதுக்கீட்டை பாதிக்காது. பொது பிரிவினருக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே 7.5% இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவார்கள்.

அதற்கான போனபைட் சான்றிதழ் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற வேண்டும். வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் படித்திருந்தால் அதற்கான கையொப்பமும் தலைமை ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும்.

மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது இந்த சான்றிதழையும் மாணவர்கள் சேர்த்து அனுப்ப வேண்டும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து எந்த உத்தரவும் வரவில்லை என மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here