அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் மூடல்: 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் காலாவதியானது

0
68

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், விடுதிகளில் இருப்பில் உள்ள சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மளிகைப் பொருட்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதி காப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கிப் பயில தமிழகத்தில் 1,099 விடுதிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 255 விடுதிகளும் உள்ளன. இவற்றில் மாணவ, மாணவிகள் சுமார் 85,914 பேர் வரை தங்கிப் பயின்று வந்தனர்.

இதுதொடர்பாக விடுதி காப்பாளர்கள் கூறியதாவது: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் உள்ள காலாவதியான மளிகைப் பொருட்கள் தொடர்பான பட்டியல், விடுதி காப்பாளர்களிடம் இருந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தால் பெறப்பட்டுள்ளது. சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மளிகைப் பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here