அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
81

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை https://www.annauniv.edu/ இணையதளத்தில் காணலாம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் ஒற்றைப்படை செமஸ்டர் தேர்வுகள் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். ECE, IT, EEE, சிவில், மெக்கானிக்கல் என பல்துறைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடைபெற்றது. இதன் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? 2019 டாப்பர்ஸ் கூறும் டிப்ஸ்

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய செமஸ்டர் தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

1. http://annauniv.edu/result.html
2. http://coe2.annauniv.edu/
3. https://aucoe.annauniv.edu/

ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுமுடிவுகளை தெரிந்து கொள்ளும் முறை:
படி 1: மாணவர்கள் முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள https://aucoe.annauniv.edu/index.html இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 3: முகப்பு பக்கத்தில் Anna University Nov Dec Semester Result 2019 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
படி 4: அந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது தேர்வு முடிவுகள் அடங்கிய பக்கம் காட்டப்படும்
படி 5: மாணவர்கள் தங்களுடைய தேர்வு எண், பிறந்த தேதி என கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
படி 6: இப்போது Anna University Result 2019 திரையில் காட்டப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here