அண்ணா பல்கலைக்கழகத்தில் 276 இடங்கள் வீண்: காரணம் என்ன?

0
16

கிண்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, (சி.இ.ஜி) சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – எம்.ஐ.டி) உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் 276 மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக பி.இ, பிடெக் படிப்புகளை விட்டு வெளியேறினர்.

தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 8ம் தேதி தொடங்கி, அம்மாதம் 28-ஆம் தேதிவரை நடந்தது. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகளுக்கு நான்கு கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான நீட்  மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நவம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் ,நீட் கலந்தாய்வில் மருத்துவப் படிப்புகளை தேர்ந்தெடுத்த அநேக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது பொறியியல் படிப்புகளை ரத்து செய்துள்ளனர்.

கிண்டி பொறியியல் கல்லூரியில் (சி.இ.ஜி ) 77 இடங்களும்,  சென்னை தொழில்நுட்ப நிறுவனம்  67  இடங்களும்,  அழகப்பன் செட்டியார் கல்வி நிறுவனத்தில் 55 இடங்களும், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் நிறுவனத்தில் 2 இடங்களும் காலியடைந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 75 இடங்கள் காலியாக உள்ளது.

“அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முதன்மைக் கல்லூரிகளில் காலியிடங்களைக் குறைக்க மருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னர் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு  நடத்தப்பட வேண்டும்” என்று முன்னாள் துணைவேந்தர் ஈ.பாலகுருசாமி கூறினார்.  மேலும்,  ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படவேண்டும் என்ற உச்ச்சநீதிமன்றத்தின் கால வரம்பும் இத்தகைய சூழலுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்தார்.

முதன்மை கல்வி நிறுவங்களில் இத்தகைய சூழல் கவலையை அதிகரிக்கின்றன எனவும், ஐ.ஐ.டி,  என்.ஐ.டி.களுக்கான கலந்தாய்வு தொடங்கும் வரை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முறைகளை அரசு தாமதப்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே சுரப்பா கூறினார்.

மருத்துவ கலந்தாய் நடந்து முடிந்த பின்னர் காலியாக உள்ள பொறியியல் இடங்களை நிரப்ப இரண்டாவது சுற்று கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here